சிகரெட்டும் கையுமாக புது சர்ச்சையில் சிக்கும் நடிகை ராதிகா – பொதுமக்கள் மத்தியில் வலுக்கும் எதிர்ப்பு!!

0
ராதிகாவின் 60வது பிறந்தநாள் விழா- குடும்பத்துடன் கலந்து கொண்டு மாஸ் காட்டிய சூர்யா, ஜோதிகா!
ராதிகாவின் 60வது பிறந்தநாள் விழா- குடும்பத்துடன் கலந்து கொண்டு மாஸ் காட்டிய சூர்யா, ஜோதிகா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா, நடித்துள்ள கொலை படத்தில் அவர் குறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி, மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

சர்ச்சையில் ராதிகா:

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான ராதிகா, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில்  முன்னணி நாயகியாக திகழ்ந்து வருகிறார். தற்போது இவர் விஜய் ஆண்டனி நடித்து வரும் கொலை என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார். கிரைம் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை விடியும் முன் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில், ரேகா என்ற கதாபாத்திரத்தில்  நடிகை ராதிகா நடித்து வருகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக், போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரில் கோட் சூட் மாட்டி கையில் சிகரெட்டுடன் மாஸ் தோரணையில் இவர் சேரில் அமர்ந்திருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வன்முறை, போதை உள்ளிட்டவைகளை ஆதரிப்பதாக, படக்குழு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இதற்கு பொதுமக்கள் மத்தியில் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here