ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய் சேதுபதி படத்தில் சூப்பர்ஸ்டார் பட நாயகி… வெளியான தகவல்!!

0

தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி நடைபோட்ட விக்ரம் வேதா படம் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் நடிகை ராதிகா அப்தே வழக்கறிஞர் வேடத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

 

ராதிகா அப்தே, தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும் பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழ் ரசிகர்களுக்கு பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளிவந்த தோனி படம் மூலம் அறிமுகமானார். பின்னர் சித்திரம் பேசுதடி 2, ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து கபாலி படத்தில் நடித்தார்.

பின்னர் ராதிகா அப்தேவின் கவனம் பாலிவுட் பக்கம் திரும்பியது. இந்நிலையில் தமிழில் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த விக்ரம் வேதா ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தமிழில் மாதவனுக்கு ஜோடியாக ஷ்ரத்தா நடித்து இருந்தார். ஹிந்தியில் இந்த கதா பாத்திரத்துக்கு ராதிகா அப்தே ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சைப் அலி கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here