தமிழ் பட வாய்ப்புக்காக கொக்கி போடும் விஜய் டிவி சீரியல் நடிகை… இன்னும் கொஞ்சம் Better ah ட்ரை பண்ணுங்க!!

0

சரவணன் மீனாட்சி சீரியல் தான் இன்று வரை அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்த ஒரு விஜய் டிவி தொடர். இந்த சீரியலில் இதுவரை 3 பாகங்கள் ஒளிபரப்பாகி உள்ளது. அதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்தில் கதையின் நாயகியாக நடித்தவர் ரச்சித்தா மகாலக்ஷ்மி. இவர் தற்போது புல்லட்  உடன் மார்டன் உடையில் செம மாசான பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

பல சீரியல்களில் தன் முகத்தை மக்களுக்கு நன்கு பதிய வைத்தவர் ரச்சித்தா. இவர் சின்னத்திரைக்கு 2011 ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அடி வைத்தார். அதன் பிறகு பல சீரியல்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். மேலும் இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரின் சீரியல்களிலும் சரி பகிரும் புகைப்படங்களிலும் சரி பெரும்பாலும் தழைய தழைய  புடவையில் ஒரு அழகு தேவதையாக காட்சி தருவார். இந்நிலையில் தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் பனியன் மற்றும் பேண்ட் அணிந்து கொண்டு படு மாடர்னான உடையில் ராயல் என்ஃபீல்டு பைக் உடன் ஹீரோன்களுக்கே  சவால் விடும் வகையில் போட்டோ ஷூட்  நடத்தி உள்ளார்.

இது ரோட்டு கடையில் எடுத்தது.. வெறும் 150 ரூபாய் தான்… தனது ரகசியத்தை அம்பலப்படுத்திய பாக்கியலட்சுமி நடிகை!!!

மேலும் இவரை சேலையிலேயே பார்த்த  இவரின் ரசிகர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் சில ரசிகர்கள் கன்னடத்தில் கதாநாயகி என்ற அந்தஸ் கிடைத்துவிட்டது. இதனால் தமிழ் பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிவிட்டாரோ என்ற கிண்டலடித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here