மீண்டும் மீண்டும் ரசிகர்களை தவிக்க வைக்கும் ரச்சித்தா… யார் கூட ரீல்ஸ் செஞ்சிருக்காங்கனு பாருங்கள்!!!

0

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் ரச்சித்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு பூனையை தன் மடியில் வைத்து கொண்டு ஒரு பாடலின் இசைக்கு ரீல்ஸ் செய்து உள்ளார்.

சின்னத்திரை சீரியலில் மிக பெரிய மைல் கல்லை எட்டிய ஒரு சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் தான் ரச்சித்தா. இவர் அந்த சீரியலின் இரண்டு சீன்களிலும் நாயகி மீனாட்சியாக நடித்தார். அதை தொடர்ந்து இளவரசி, நாச்சியார்புரம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

மேலும் வெள்ளித்திரை அந்த அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் மற்றும் புகழை தரவில்லை. இதனால் இவர் சீரியலிலேயே தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினார். அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சமீபகாலமாக இவர் அந்த சீரியலை விட்டு விலக உள்ளதாக பல வதந்திகள் வந்தது. அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் முக்கியமான ஒன்றாக கன்னட திரையுலகில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்ற ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இவரின் இந்த வாய்ப்பு மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வரும் பிரியா பவானி சங்கர், வாணி போஜன் உள்ளிட்ட நடிகைகள் வரிசையில் இவரும் இணைந்து உள்ளார். மேலும் அவரின் மீதான எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் கூடியுள்ளது. மேலும் எக்கசக்க ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள இவர் அவ்வப்போது அவர்களை மகிழ்விக்க தனது இன்ஸ்டாவில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கமாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் படப்பிடிப்பு தளத்தில் தனது மடியில்  பூனை ஒன்றை வைத்து அதை தடவி கொடுத்து கொண்டே சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் இசை பின்னணி இசையாக வர ரீல்ஸ் செய்து உள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோ அவரின் ரசிகர்களை ஏங்க வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here