ஓ.. அப்போ இதான் உங்க ஃபிட்னெஸ் சீக்ரெட்டா?? தன் கட்டுடல் மேனி ரகசியத்தை வெளியிட்ட ராஷி கண்ணா!!

0

ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் நடிகைகள் இப்போதைய காலத்தில் மிக குறைவு. அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் ராஷி கண்ணா. தற்போது இவர் மிக கடினமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவர் ரசிகர்கள் அந்த வீடீயோவை பார்த்து விட்டு, ஓ.. அப்போ இதான் உங்க ஃபிட்னெஸ் சீக்ரெட்டா?? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பவர் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இவர் இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன், அடங்க மறு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட ஒரு பேட்டி ஒன்றில் தெலுங்கு சினிமாவில் நீங்கள் நிலைக்க வேண்டுமென்றால், அனுஷ்கா அல்லது சமந்தா போல நல்ல கதைகளை தேர்ந்தேடுத்து நடிக்கும் ஒரு நல்ல நடிகையாக இருக்கவேண்டும் என இவர் குறிப்பிட்டு இருந்தது அனைவராலும் வரவேற்கப்பட்டது.

raashi khanna

பெரும்பாலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராத இவர் தன் உடம்பை பிட்டாக வைத்திருப்பதில் அதிகம் கவனம் செலுத்தக்கூடியவர். சமூக வலைதளத்தில் இவர் பகிரும் ஒவ்வொரு பகிர்வுக்கு கீழேயும் ரசிகர்கள் இவரின் ஃபிட்னெஸ் ரகசியத்தை கேக்காமல் இருப்பதில்லை. தற்போது இவர் ஒரு ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் மிக கடனமான உடற்பயிற்சியையும் மிக எளிதாக ராஷி கண்ணா செய்வதை பார்த்த நெட்டிசன்ஸ், இதான் அப்போ ஃபிட்னெஸ் ரகசியமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here