கமல்ஹாசனின் ‘Blood & Battle’….,நாளை அப்டேட் ரிலீஸ்….,Be Ready மக்களே!!

0
கமல்ஹாசனின் 'Blood & Battle'....,நாளை அப்டேட் ரிலீஸ்....,Be Ready மக்களே!!
கமல்ஹாசனின் 'Blood & Battle'....,நாளை அப்டேட் ரிலீஸ்....,Be Ready மக்களே!!

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் நாளை வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

திரைப்பட அப்டேட்

தமிழ் சினிமாவின் தரத்தை உலகெங்கும் அறியச் செய்தவர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், தயாரிப்பு, இசை என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் நடிகர் கமல். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகர் கமல்ஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் எக்கச்சக்கமான வசூலை குவித்திருந்தது. இந்த படத்தை கமல் தயாரித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது திரைப்பட தயாரிப்பில் ஆர்வம் செலுத்தி வரும் நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமியை வைத்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். மேலும், ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் புதிய படம் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஹன்சிகாவின் ‘MAN’ திரைப்படம்…., ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….,

இது குறித்த முக்கிய அப்டேட் நாளை வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில், ‘Blood & Battle’ என்ற கேப்ஷனின் கீழ் புதிய படத்திற்கான அப்டேட் நாளை (மார்ச் 9) மாலை 6.30 மணியளவில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட், கமல்ஹாசனின் 234 ஆவது திரைப்படத்திற்கானதாக இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here