பொதுவாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சமச்சீர் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே பாடம் என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 15 தேதியில் இருந்து 11 – 12 வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. இதோடு நாளை முதல் 27 ஆம் தேதி வரை 6 – 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்க இருக்கிறது. இப்படி இருக்கையில் சில வருடங்களாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் இந்த முறை மீண்டும் பொது வினா தாள்கள் முறையை கல்வி குழு அறிவித்துள்ளது. இதன்படி அரசு தேர்வு துறை வினாத்தாள்களை தயாரித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு அனுப்புகிறது. இதை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் பதிவிறக்கம் செய்து தேர்வுகளை நடத்தி கொள்ள வேண்டுமாம். மேலும் இதில் ஏதேனும் குளறுபடிகள் அல்லது வினாத்தாள்கள் கசிதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மகளிர் உரிமை தொகை ரூ.1000.., நாளைக்கு இந்த விஷயம் நடக்கும்.., முக்கிய அப்டேட்!!