ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தததா புஷ்பா படம் – கடைசியில தான் ட்விஸ்ட்டே இருக்கு!!

0

பல்வேறு தடைகளை உடைத்து இன்று வெளியாகி உள்ள புஷ்பா திரைப்படம்,குறித்த திரை விமர்சனங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புஷ்பா திரைவிமர்சனம்:

புஷ்பா திரைப்படம் இன்று தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,இந்தி,தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி உள்ளது. புஷ்பா என்கிற புஷ்பராஜன் ஆக நடிக்கும் அல்லு அர்ஜுன்,இந்த படத்தில் அதே கதாபாத்திரமாக வாழ்ந்து சென்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.


பொதுவாக காடுகளை பின்புலமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் இந்திய சினிமாவில் கொஞ்சம் தான். ஏனென்றால்,இந்த லொக்கேஷனில் ஷூட்டிங் மேற்கொள்வது மிகவும் கடினம் என்பதால், காட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களை இயக்குனர்கள் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். ஆனால்,அதையெல்லாம் தாண்டி, சவால்களை சாதனையாக்கி புஷ்பா திரைப்படம் வெற்றிகரமாக சாதித்துள்ளது.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நடக்கும் செம்மர கடத்தலை மையப்படுத்தி,இந்த கதை நகர்கிறது. கிராமத்து நாயகியாக,வரும் ராஷ்மிகா மந்தனா பாவாடை தாவணியில் வந்து இளசுகளை தெறிக்க விடுகிறார். இவர் லுக்கில் வந்த, “ஓ சாமி பாடல்” அவரை தூக்கி நிறுத்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும்,முன்னணி நடிகையான சமந்தா ஆடிய ஓ சொல்றியா பாடல் டாப் ரேஞ்சில் உள்ளது. கடைசி நேரத்தில் பகத் பாசில் என்டர் ஆகி டிவிஸ்டை அதிகரித்துள்ளார்.


முழுவதுமாக சொல்லப் போனால், கே ஜி எஃப் படத்தின்  ஒரு சாயல் இதில் உள்ளது. அதே அம்மா சென்டிமென்ட்..அதே ஆக்ஷன் திரில்லர், ஒரே வித்தியாசம் அங்கே தங்கம் இங்கே தங்கத்திற்கு நிகரான செம்மரம்…. முழுவதும் சொல்லப் போனால், எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்து விட்டது, ஆனால் இதன் மொத்த கதையும் இரண்டாம் பாகத்தில் தான் வெளிவர உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் இரண்டாவது பாகம் ஆவது… “புஷ்பா நா பிளவர் இல்ல பயர் “என்பதை நிரூபிக்கிறதா?? என்று..

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here