புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு., பெருமாள் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!!

0
புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு., பெருமாள் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!!
புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு., பெருமாள் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!!

தமிழகத்தில், திருப்பூர் அவிநாசிபாளையம் ராமசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு, இந்த (புரட்டாசி) மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பக்தர்கள் வருகை அதிகப்படியாக இருக்கும் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு பேருந்துகள்:

புனித மிக்க புரட்டாசி மாதம், கடந்த வாரம் தான் பிறந்தது. இந்த புரட்டாசி மாதத்தில் விரதங்கள் கடைபிடித்தால் அதிகம் புண்ணியம் கிடைக்கும். மேலும் இந்த மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம், முன்னோர்கள் வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. இதையடுத்து புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்காக விரதம் இருந்து கோவிலுக்குச் சென்று பக்தர்கள் வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் திருப்பூரில் இருந்து அவிநாசிபாளையம் ராமசாமி கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், உடுமலை பாலாஜி கோவில், காரமடை ரங்கநாதர் கோவில் தென் திருப்பதி, கோவில் உட்பட பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களுக்கு சிறப்பு பேருந்துகள் வழக்கமாக இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், திருப்பூர் அருகே உள்ள அவிநாசிபாளையம் ராமசாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்களின் வசதிக்காக அவிநாசிபாளையம் – பொங்கலுார் சாலையில், தற்காலிக பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டு உள்ளது.

ரயில் பயணிகளுக்கு அறிமுகமாகும் சூப்பர் வசதி – இனி கவலையே இல்லை! நிர்வாகம் அதிரடி!!

நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை தொடங்க உள்ள நிலையில், காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் வழி பஸ் ஸ்டாண்ட், திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட், காங்கயம், பல்லடம், தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பூர் மற்றும் அவிநாசியில் இருந்து தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here