கட்சியில் ஏற்பட்ட பிளவு? – பஞ்சாப் மாநில முதல்வர் அதிரடி ராஜினாமா!!

0
கட்சியில் ஏற்பட்ட பிளவு? - பஞ்சாப் மாநில முதல்வர் அதிரடி ராஜினாமா!!
கட்சியில் ஏற்பட்ட பிளவு? - பஞ்சாப் மாநில முதல்வர் அதிரடி ராஜினாமா!!

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக வந்த தகவல் பொதுமக்களிடமும், அவரது தொண்டர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் ராஜினாமா:

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு சில நாட்களுக்கு முன்பு, உட்கட்சி பூசலால் முதல்வருக்கு எதிரான பனிப்புயல் கிளம்பியது. இதனை அடுத்து இந்த மாநில முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், மாநிலத்தில் முதல்வர் பதவி குறித்த முக்கிய செய்தி வெளியாகி தொண்டர்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியில் ஏற்பட்ட பிளவு? - பஞ்சாப் மாநில முதல்வர் அதிரடி ராஜினாமா!!
கட்சியில் ஏற்பட்ட பிளவு? – பஞ்சாப் மாநில முதல்வர் அதிரடி ராஜினாமா!!

அதாவது, முதல்வர் பதவியில் இருந்து வரும் அம்ரிந்தர் சிங் பதவி விலக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல்வர் பதவி விலகல் குறித்த இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விரைவில் காங்கிரஸ் தலைமை இந்த மாநிலத்திற்கு புதிய முதல்வரை நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியில் ஏற்பட்ட பிளவு? - பஞ்சாப் மாநில முதல்வர் அதிரடி ராஜினாமா!!
கட்சியில் ஏற்பட்ட பிளவு? – பஞ்சாப் மாநில முதல்வர் அதிரடி ராஜினாமா!!

இதற்கு முன்பு, பாஜக ஆளும் மாநிலங்களில் தான் இது போன்ற செயல்கள் நடந்து வந்தது. அதாவது, கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவின் பதவி விலகல் மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பதவி விலகல் போன்றவர்களின் வரிசையில் தற்போது பஞ்சாப் முதல்வர் இணைந்திருப்பது உண்மையாகி உள்ளது. சமீப காலமாக நடந்து வரும் மாநில முதல்வர்கள் பதவி விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here