தொடர்ந்து அதிரடி காட்டும் பஞ்சாப் அணி…..,4 முறை 200+ ரன்கள்….,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே….,

0
தொடர்ந்து அதிரடி காட்டும் பஞ்சாப் அணி.....,4 முறை 200+ ரன்கள்....,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே....,
தொடர்ந்து அதிரடி காட்டும் பஞ்சாப் அணி.....,4 முறை 200+ ரன்கள்....,இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே....,

நடப்பு ஆண்டிற்கான IPL ஆடுகளம் கடுமையான போட்டி, சண்டை என ஸ்வாரசியம் நிறைந்ததாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக, IPL 2023 தொடரில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு புள்ளிப்பட்டியலில் தங்களது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு IPL தொடரில் அதிக முறை 200க்கும் மேல் ரன்கள் குவிக்கப்பட்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்போது, இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக 200+ ரன்களை குவித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதன் மூலம், IPL வரலாற்றில் தொடர்ச்சியாக 200க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்த அணி என்ற சாதனையைப் பெற்றுள்ளது பஞ்சாப். அதாவது, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 214 ரன்கள், லக்னோவுக்கு எதிராக 201, சென்னை அணிக்கு எதிராக 201, மும்பைக்கு எதிராக 214 ரன்களை எடுத்து தொடர்ச்சியாக 200க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளது பஞ்சாப் அணி.

சிவகார்த்திகேயனுடன் இணையும் இசை பிரபலம்……,ஆட்டம் பாட்டம் கன்பார்ம்….,

இந்த சீசனில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்களை எடுத்து அந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இருப்பினும் இன்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here