#PBKSvsMI ஐபிஎல் போட்டி – எழுச்சி பெறுமா மும்பை இந்தியன்ஸ்??எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
mi vs pbks

14 வது ஐபிஎல் தொடருக்கான இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை மைதானத்தில் நடைபெறுகிறது.

பஞ்சாப் vs மும்பை:

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் தான் விளையாடிய 4 போட்டிகளில் 2ல் வெற்றி மற்றும் 2ல் தோல்வியை தழுவியுள்ளது. அதேபோல் புதிய பொலிவுடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தான் விளையாடிய 4 போட்டிகளில் 1ல் மட்டுமே வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. எனவே இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாகும். நடப்பு சாம்பியனான மும்பை அணி இந்த முறை பெரிய அளவில் சொற்பிக்கவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த அணியில் பல அதிரடி வீரர்கள் உள்ளனர். ஆனால் ரோஹித், சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக விளையாடுகின்றனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறி விடுகின்றனர். அந்த அணி பந்துவீச்சில் வலிமையாக காணப்படுகிறது. எனவே இன்றைய போட்டியில் மும்பை அணி பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்று கூறப்படுகிறது.

Mumbai Indians
Mumbai Indians

அதேபோல் ராகுல் தலைமையில் புது பொலிவுடன் காட்சியளிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்த தொடர் மிக மோசமாக இருந்து வருகிறது. தான் விளையாடிய முதல் போட்டியில் மட்டும் அதிரடி காட்டிய பஞ்சாப் அணி அடுத்து நடக்கும் அனைத்து போட்டிகளிலும் சுருண்டு வருகிறது. எனவே இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே மும்பை அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

pbks
pbks

‘லிப்ட்’ படத்தின் ‘என்ன மயிலு சிரிச்சிகுனு’ பாடல் – பின்னி பெடல் எடுத்த சிவகார்த்திகேயன் & கவின் காம்போ!!

இதுவரை இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் 23 முறை மோதியுள்ளனர். அதில் மும்பை அணி அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 14 முறையும் பஞ்சாப் அணி 12 முறையும் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியின் வெற்றி இரு அணிக்கும் மிக முக்கியம் வாய்ந்ததால், இந்த போட்டி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here