#PBKSvsKKR ஐபிஎல் போட்டி – தொடர் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா!ஆர்வத்தில் ரசிகர்கள்!!

0

ஐபிஎல் தொடருக்கான இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பல பரிட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.

பஞ்சாப் vs கொல்கத்தா

இந்த தொடரில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். முதல் போட்டியில் அசத்திய இந்த இரு அணிகள் அடுத்து வந்த அனைத்து போட்டிகளிலும் மிக மோசமாக விளையாடியுள்ளது. இதுவரை இரு அணிகளும் தலா 5 போட்டிகளை விளையாடியுள்ளனர். அதில் கொல்கத்தா அணி 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் பஞ்சாப் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இரு அணிகளுமே இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் தொடர் தோல்வியை தவிர்த்தால் மட்டுமே இரு அணிகளுக்கும் காலிறுதி சுற்றுக்கு செல்ல வாய்ப்பிருக்கும். கொல்கத்தா அணி கடைசியாக சென்னை அணிக்கு எதிராக மிக சிறப்பாக போராடியது.

ஆனாலும் அதில் தோல்வியை தான் தழுவியது. பின்பு ராஜஸ்தான் அணிக்கு எதிராக மிக மோசமான தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பதிவு செய்ய முடியும். அதேபோல் கடைசியாக மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

கடந்த போட்டியை போல் இந்த போட்டியிலும் பஞ்சாப் அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் மிக சிறப்பாக செயல்பட்டால் தனது 3வது வெற்றியை மிக எளிதாக பதிவு செய்து விடும் என்று கூறப்படுகிறது. இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 18 முறை தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் அணி 9 முறை தனது வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here