மாநில அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி….,பஞ்சாப் அரசு அறிவிப்பு….,

0
மாநில அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி....,பஞ்சாப் அரசு அறிவிப்பு....,
மாநில அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி....,பஞ்சாப் அரசு அறிவிப்பு....,

மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளத்துடன் சேர்த்து கூடுதலாக பயணப்படி, அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகளைப் பெறுகின்றனர். அந்த வகையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகையை வழங்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

அதாவது, பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களுக்கு டிஏ தவணை ஜூலை 2015 முதல் நிலுவையில் உள்ளது. இந்த 6% நிலுவைத் தொகையை விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், ‘அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசு. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிலுவைத் தொகையின் ஒரு தவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

IPL 2023: பிளே ஆப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு…,

அதன்படி ஊழியர்கள், ஜூலை 1, 2025 படி 6% DA நிலுவைத் தொகையை பெறுவார்கள். இதற்காக அரசின் கருவூலத்திற்கு 356 கோடி ரூபாய் செலவாகும்’ என்று கூறியுள்ளார். அதாவது, DA நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்ற மாநில அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here