அரசு ஊழியர்கள் கவனத்திற்கு: கொரோனா தடுப்பூசி போடாதோருக்கு லீவு விட்டாச்சு – மாநில அரசு அதிரடி!!

0
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு: கொரோனா தடுப்பூசி போடாதோருக்கு லீவு விட்டாச்சு - மாநில அரசு அதிரடி!!
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு: கொரோனா தடுப்பூசி போடாதோருக்கு லீவு விட்டாச்சு - மாநில அரசு அதிரடி!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு, தடுப்பூசி செலுத்திய பின்னர் பணிக்கு வரலாம் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

கட்டாய விடுப்பு:

உலகம் முழுவதும் பரவியுள்ள கோவிட் 19 தொற்று பல மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. பல மக்களின் உயிரை காவு வாங்கியுள்ள இந்த வைரஸ், பல லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தையும் முடக்கியுள்ளது. தற்போது வரை தடுப்பூசி செலுத்தி கொள்வது மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசி செலுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு: கொரோனா தடுப்பூசி போடாதோருக்கு லீவு விட்டாச்சு - மாநில அரசு அதிரடி!!
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு: கொரோனா தடுப்பூசி போடாதோருக்கு லீவு விட்டாச்சு – மாநில அரசு அதிரடி!!

மாநிலங்களில் தற்போது வைரஸ் பரவல் என்பது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் நோய் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள் தவிர மற்ற இடங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு: கொரோனா தடுப்பூசி போடாதோருக்கு லீவு விட்டாச்சு - மாநில அரசு அதிரடி!!
அரசு ஊழியர்கள் கவனத்திற்கு: கொரோனா தடுப்பூசி போடாதோருக்கு லீவு விட்டாச்சு – மாநில அரசு அதிரடி!!

தற்போது பஞ்சாப் அரசு இது சார்ந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, குறைந்த பட்சம் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும். மற்றவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தடுப்பூசி செலுத்திய பிறகு பணிக்கு வந்தால் போதுமானது. மேலும், மக்களை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்திருப்பதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here