புனீத் ராஜ்குமார் இறுதியாக நடித்த திரைப்படத்தின் First look வெளியானது – போஸ்டரால் கண்கலங்கிய ரசிகர்கள்!!

0

யாருமே எதிர்பாராத நேரத்தில் நம்மை விட்டு மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் இறுதியாக நடித்த திரைப்படத்தின் First look தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புனீத் ராஜ்குமார்:

கன்னட நடிகரான புனீத் ராஜ்குமார் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி அன்று மாரடைப்பின் காரணமாக காலமானார். இவரது இறப்பு கன்னட திரையுலகிற்கு மட்டும் அல்லாமல் தமிழ் திரையுலகிற்கும் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு யாருமே எதிர்பாராத நேரத்தில் நம்மளை விட்டு மறைந்தார்.

இந்நிலையில் இவர் இறுதியாக நடித்த ஜேம்ஸ் என்னும் திரைப்படத்தை அவரது பிறந்தநாளான மார்ச் 17, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தின் First look குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்படுள்ளது. ராணுவ உடையில் கம்பீரமாக நடந்து செல்லும் புனித் ராஜ்குமாரின் படத்தின் First look ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் பலரும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here