மக்களே உஷார்.. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து ரூ.60000 பறிகொடுத்த பெண்!!

0
KN905R Online night shopping and paying with credit card and laptop. Man buying on an internet store in modern home office late at night. Typing login inform

ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்தபோது 60,000 ரூபாயை புனேவை சேர்ந்த பெண் இழந்துள்ளார். இந்த செய்தி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேவை சேர்ந்த 46 வயதான பெண், தன் பெற்றோர்களின் திருமண நாளிற்கு உணவு ஆர்டர் செய்ய ஒரு நல்ல உணவகத்தை இணையத்தில் தேடியுள்ளார். அப்போது சமூக வலைத்தள பக்கத்தில் மிக பிரபலமான ஹோட்டல் என்று ஒரு உணவகத்தை பற்றி பதிவு இருந்தததை பார்த்துள்ளார்.

எனவே அந்த ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்ய, ஆன்லைனில் தன் விவரங்களை உள்ளிட்டு உள்ளார். பின்னர் ஜூன் 19 ஆம் தேதி இவர் ஆர்டர் செய்த உணவுக்கு ரூ.10000 அட்வான்ஸ் தரச்சொல்லி போன் வந்துள்ளது. அதை செலுத்த இவர் தன் கிரெடிட் கார்டு விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்துள்ளார். பின்னர் ஜூன் 20 ஆம் தேதி இவர் அனுமதி இல்லாமலேயே ரூ.49600 இவர் அக்கவுண்ட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன் பிறகு தான் அது ஒரு போலி இணையத்தளம் என்று இவருக்கு தெரியவந்துள்ளது. காவல் நிலையத்தில் தற்போது அப்பெண் புகார் அளித்துள்ளார். இதேபோல சென்ற வருடமும் பெங்களூரை சேர்ந்த பெண் இதுபோல ரூ.50000 ஐ இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here