சச்சின், ராகுல் டிராவிட் வரிசையில் இணைந்த புஜாரா…, டெஸ்டில் 2000 ரன்களை கடந்து அசத்தல்!!

0
சச்சின், ராகுல் டிராவிட் வரிசையில் இணைந்த புஜாரா..., டெஸ்டில் 2000 ரன்களை கடந்து அசத்தல்!!
சச்சின், ராகுல் டிராவிட் வரிசையில் இணைந்த புஜாரா..., டெஸ்டில் 2000 ரன்களை கடந்து அசத்தல்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் முன்னணி வீரரான புஜாரா டெஸ்டில் மட்டும் 2000 ரன்களை எடுத்து அசத்தி உள்ளார்.

புஜாரா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், ரோஹித் சர்மா 35 ரன்களில் வெளியேறிய நிலையில், சுப்மன் கில்லுடன், சீனியர் வீரரான புஜாரா ஜோடி சேர்ந்தார். இவர், ஆஸ்திரேலிய அணி எதிரான இந்த போட்டியில் 20 ரன்களை கடந்ததன் மூலம், இந்தியாவின் ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார். அதாவது, புஜாரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 43 இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்த 4வது இந்திய வீரரானார்.

IPL 2023: பயிற்சியில் இறங்கிய ரஹானே…, CSK அணியின் கேப்டனாக மாறுவாரா??

இந்த பட்டியலின் முதல் மூன்று இடங்களில், இந்தியாவின் வி வி எஸ் லட்சுமணன் 41 இன்னிங்ஸிலும், சச்சின் டெண்டுல்கர் 42 இன்னிங்ஸிலும், ராகுல் டிராவிட் 53 இன்னிங்ஸிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here