நீண்ட நாள் காதலியை ரகசிய திருமணம் செய்துகொண்ட புகழ் – வைரலாகும் அதிர்ச்சி தகவல்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமான புகழுக்கு கடந்த வாரம் ரகசிய திருமணம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி புகழ்

கடலூரில் இருந்து கையில் எதுவுமே இல்லாமல் தனது திறமையை மட்டுமே சென்னைக்கு வந்தவர். ஆரம்பத்தில் பல கஷ்டங்களை அனுபவித்து பல கிடைத்த வேலைகளை வாழ்ந்து வந்தவர். விஜய் டிவியில் பல கஷ்டங்களுக்கு பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சிரிப்பு டா, அது இது எது போன்ற நிகழ்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்துகொள்ள ஆரம்பித்தார்.

அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு தனது திறமையை வெளிப்படுத்த பாலமாக அமைந்தது. தனது பாவனையிலேயே பலரையும் சிரிக்க வைத்தார். அடித்த வடிவேலு என்று சொல்லும் அளவிற்கு தற்போது வளர்த்துள்ளார். தனது அப்பாவி தனத்தால் தான் அனைவரையும் கொள்ளை கொண்டார்.

புகழ் தற்போது படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இவ்வாறு தனது வெற்றி பாதையை நோக்கி பயணம் செய்துகொண்டுள்ள அவரை பற்றி ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது புகழ் நீண்ட வருடங்களாக முஸ்லீம் பெண் ஒருவரை காதலித்து வருவதாகவும், மேலும் அப்பொழுது அவரின் குடும்பம் ஒத்துக்கொள்ளாததால் காத்துக்கொண்டிருந்துள்ளார்.

தற்போது அந்த பெண்ணின் குடும்பம் பச்சை கோடி காட்ட கடந்த வாரம் ரகசியமாக திருமணம் நடந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதற்காக அனைவரையும் அழைத்து வந்து ட்ரீட் வேறு கொடுத்துள்ளார். அதன் பிறகு தான் அனைவருக்குமே தெரியுமாம். இந்த தகவலை பற்றி புகழிடம் கேட்டதிற்கு சரியான வரவில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புகழ் வளர்ந்து வரும் காரணத்தால் இந்த வதந்திகள் பரவி வருகிறதா?? என்றும் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here