புதுக்கோட்டை சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை உறுதி – சிறப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!!

0

கடந்த 2020ம் ஆண்டு புதுக்கோட்டையை சேர்ந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலால் உயிரிழந்ததை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தூக்கு உறுதி :

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த, 7 வயது சிறுமி கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் காணாமல் போனார். வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் செய்தனர். சிறுமியை தீவிரமாக தேடி வந்த போலீசார், கிராமத்தின் அருகே கருவேலங்காட்டு பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலையுண்டு கிடந்த சிறுமியின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் வன் கொடுமைக்கு உள்ளானது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கில், 26 வயதுடைய சாமிவேல் என்கிற ராஜாவை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு, 3 மரண தண்டனை விதிப்பதாக மகிளா நீதிமன்ற நீதிபதி Dr.சத்யா உத்தரவிட்டார். இதையடுத்து, அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை உறுதி செய்ய போலீசார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அமர்வு குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை தற்போது உறுதி செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here