அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி மாலையிலும் உணவு வழங்கப்படும்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி மாலையிலும் உணவு வழங்கப்படும்..., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
அரசு பள்ளி மாணவர்கள் பசியின்றி கல்வி கற்பதற்காக, தமிழக முதல்வர் காலை உணவுத் திட்டத்தை 2022-2023 ஆம் கல்வி ஆண்டு முதல் தொடங்கி வைத்தார். இந்த திட்டம், பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் காலை உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் புதுச்சேரி மாநில அரசு, பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் மற்றும் முட்டை தருவதால் காலை உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்பு குறைவு தான் என்று தெரிவித்திருந்தது. ஆனால், காலை உணவுக்கு பதிலாக மாலை நேரத்தில் சிறுதானிய சிற்றுண்டியை மாணவர்களுக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, புதுச்சேரியில் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here