மாநிலம் முழுவதும் 5ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை – அரசுக்கு திடீர் கோரிக்கை!!

0
தமிழகத்தில் அசுர வேகமெடுக்கும் கொரோனா - பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்? அமைச்சர் விளக்கம்!!
மாநிலம் முழுவதும்  5ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை - அரசுக்கு திடீர் கோரிக்கை!!

புதுச்சேரியில், குழந்தைகளிடையே அதி தீவிரமாக பரவி வரும் விஷ காய்ச்சலை கட்டுப்படுத்த எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 மாணவர்களுக்கு விடுமுறை :

புதுச்சேரி மாநிலத்தில், சமீப தினங்களாக விஷ காய்ச்சல் என்ற தொற்று நோய் அதிதீவீரமாக மக்களிடையே பரவி வருகிறது. கடந்த 2 மாத காலமாக சளி, இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி ஆகிய அறிகுறியுடன் கூடிய விஷக்காய்ச்சல் பொதுமக்களிடையே, குறிப்பாக குழந்தைகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

anbalagan.

இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை வைத்த புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், மாநிலத்தின் பல இடங்களில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு எழுந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். கொரோனா காலத்தில், மக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டார்களோ, அதே அளவுக்கு இந்த மர்ம காய்ச்சல்  பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக, இந்த நோய் குழந்தைகளை அதிகம் தாக்குவதால்  எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை  அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபோக, முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை இணைந்து  இந்த விஷக்காய்ச்சல் விஷயத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துவக்க வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் பரவும் இந்த புது காய்ச்சல், பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here