பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு – மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு - மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மாநில முழுவதும் உள்ள பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், கட்டாயம் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என புதுச்சேரி கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கல்வித்துறை உத்தரவு :

புதுச்சேரி மாநிலத்தில், கல்வித்துறையின் கீழ் 712 அரசு பள்ளிகள் இயங்கி வருவதாகவும், இதில் 4000 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் நிலை-1, நிலை-2, ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பள்ளி நிர்வாக பொறுப்புகளை கவனித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்கள், நிர்வாக பொறுப்பை மட்டும் கவனித்து வருவதாகவும், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில்லை என்றும் கல்வித்துறைக்கு புகார் சென்றுள்ளது. இதற்காக ஏற்கனவே, கல்வித்துறை உத்தரவிட்டும் தலைமை ஆசிரியர்கள் இத்தனை கண்டு கொள்ளவில்லை. இதனால், மாநில கல்வித்துறை மீண்டும் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

இதில், பள்ளி முதல்வர்கள் வாரத்திற்கு 6 வகுப்புகளும், துணை முதல்வர் வாரத்திற்கு 12 வகுப்புகளும் நடத்த வேண்டும் எனவும், நிலை-1 தலைமை ஆசிரியர்கள் வாரத்திற்கு 6 வகுப்புகளும், நிலை-2 தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாரத்திற்கு 10 வகுப்புகளும் கட்டாயம் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த ஆணை பள்ளிகளில் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here