குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 2 மாதங்கள் இலவச அரிசி – மாநில அரசு அதிரடி!!

0

நம் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களுக்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி வழங்கப்படவுள்ளது.

அரசு உத்தரவு :

நாட்டில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு  இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின், பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற இந்த திட்டத்தின் கீழ், இலவச அரிசி அல்லது 5 கிலோ கோதுமை மற்றும் பயனாளிகள் விரும்பும் 1 கிலோ பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. நம் அண்டை யூனியன் பிரதேசமான புதுசேரியில் டிசம்பரில் நீட்டிக்கப்ட்ட இந்த திட்டம் தற்போது, ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

இதனை அடுத்து, இந்த திட்டம் புதுவை மாநிலத்தின் வில்லியனூர், மங்கலம், ஏம்பலம், நெட்டப்பாக்கம் மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று முதல் துவங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.  இதன் மூலம், புதுவை மாநிலத்தில் உள்ள பல குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர். பயனாளிகள் முழுமையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here