மாநிலத்தில் இனி 50% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதி – அறிவிப்பை வெளியிட்டு அதிரடி உத்தரவு!!

0
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - வாரத்தில் ஒரு நாள் இனி விடுமுறை! அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!!

நம் அண்டை யூனியன் பிரதேசமான புதுவையில், இனி 50% அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசு உத்தரவு:

நம் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், நாள்தோறும் கொரோனா பாதிப்பு மிகவும் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே, மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, மால்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வருகிற ஜனவரி 31ஆம் தேதி வரை 50% அரசு ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வரவேண்டுமென புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில், குரூப் பி மற்றும் குரூப் சி  ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் எனவும், அரசு செயலர்கள் மற்றும் அரசு  துறை தலைவர்கள் உள்ளிட்டோர் முழுமையாக பணிக்கு வர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் மற்றும் உடல் ஊனமுற்றோர் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம் எனவும், அரசுத்துறை சார்ந்த கூட்டங்கள் அனைத்தும் இனி காணொளி வாயிலாக மட்டுமே நடைபெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில், இனி சுழற்சி முறையிலேயே அரசு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here