மாநிலத்தில் மின்சார ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் – பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதி!!

0
மாநிலத்தில் மின்சார ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் - பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதி!!
மாநிலத்தில் மின்சார ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் - பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதி!!

மாநிலத்தில் மின்சார துறை தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து, புதுவை அரசுக்கு எதிராக 2000 மின்சார ஊழியர்கள் இன்று முழு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஊழியர்கள் போராட்டம் :

புதுச்சேரி அரசு, மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை அண்மையில் அறிவித்தது. இதனை கண்டித்து, ஊழியர்கள் கடந்த முறை போராட்டத்தை தொடங்கினர். ஆனால் அரசுடன் நடந்த சுமூக பேச்சுவார்த்தை காரணமாக, இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், மின்சார துறை தனியார் மயத்துக்கான டெண்டர் வரும் 30ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியானதால், மின்சார ஊழியர்கள் கொந்தளித்தனர். மீண்டும் அரசுக்கு எதிராக, காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் போலி பத்திரப்பதிவுக்கு எதிரான புதிய சட்டம் – இன்று முதல் அமல்! முதல்வர் தொடங்கி வைப்பு!!

புதுவை முழுவதும் உள்ள 2000-க்கும் மேற்பட்ட மின் பணியாளர்கள் பணியை புறக்கணித்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால், மின் கட்டண வசூல் மையம் மூடப்பட்டு, மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here