12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இலவச லேப்டாப்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி முதல்வர்!! 

0

பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு மணிலா அரசும் பல்வேறு சிறப்பு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்த வகையில், பள்ளி மாணவர்களின் எதிர்கால தேவையை பூரித்து செய்யும் வகையில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி அவர்கள் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, 2023-2024 ம் கல்வியாண்டில் பயின்று வரும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

பணி நியமனத்திற்காக காத்திருக்கும் தமிழக ஆசிரியர்களே…, TET தேர்வில் வெற்றி பெற அரிய வாய்ப்பு…, யூஸ் பண்ணிக்கோங்க!!

ஆனால், 2022-2023 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் முடித்து விட்டு தற்போது மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படமாட்டாது என குறிப்பிட்டு கூறியிருந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நடந்து 2 வாரத்திற்கு மேல் ஆன நிலையில், தற்போது புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் புதுச்சேரியில் கடந்த கல்வியாண்டில் 12 ம் வகுப்பு படித்துவிட்டு தற்போது மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here