பப்ஜியால் நேர்ந்த விபரீதம் – தாயை சுட்டுக் கொன்ற இளம் சிறுவன்! போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்!!

0
பப்ஜியால் நேர்ந்த விபரீதம் - தாயை சுட்டுக் கொன்ற இளம் சிறுவன்! போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்!!
பப்ஜியால் நேர்ந்த விபரீதம் - தாயை சுட்டுக் கொன்ற இளம் சிறுவன்! போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்!!

உத்திரபிரதேச மாநிலத்தில், பப்ஜி விளையாட தடை விதித்த தாயை சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 கொடூர சம்பவம் :

கொரோனா காரணமாக, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்  மட்டுமே நடத்தும் சூழல் உருவானது. இதையடுத்து குழந்தைகள் பலரது கையில், ஸ்மார்ட்போன் கொடுக்கப்பட்டது. இந்த மொபைல் போனை ஒரு சிலர், தவறான வழிகளில் பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டுகளான பப்ஜி உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தினர். இதற்கு உளவியல் ரீதியாக சிகிச்சை அளித்தும், ஒரு சில மாணவர்களிடையே இந்த நிலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பப்ஜி விளையாட அனுமதிக்காத தனது தாயை சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான்.

பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இருந்த அந்த சிறுவனை, தாய் கண்டித்ததால் ஆத்திரத்தில் தன் தந்தையின் துப்பாக்கியை எடுத்து  சரமாரியாக சுட்டுள்ளான். இதில், மயங்கி சரிந்த தாயின் உடலை வீட்டுக்குள் 2 நாட்கள் மறைத்து வைத்து நாடகமாடியுள்ளான். பின், போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளான். இந்த கொடூர சம்பவம் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here