டீசல் விலை குறைப்பு?? – தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்!!

0

சில நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில் பெட்ரோலின் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

ஏனெனில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கொரோனா காலத்திலும் கூட பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி கொண்டு தான் வந்தன. எனவே நிதியமைச்சர் அறிவித்த இந்த விலை குறைப்பு மக்களுக்கு நிம்மதியை அளித்தது. ஆனால் டீசலின் விலையை குறைக்காததது ஏன் என அரசிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

இன்று சட்டப்பேரவையில் டீசல் மீதான தமிழக அரசின் வரியை குறைக்காதது ஏன்? என்ற கேள்விக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில் மேலும் பெட்ரோலின் விலை குறைப்பால் 2 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளதாகவும், டீசல் பயனாளிகளுக்கு வேறு வழியில் நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும்  தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசின் தற்போதய நிலைமையை கருத்தில் கொண்டு பெட்ரோலின் மீதான விலை மட்டும் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் பதில் அளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here