கடுப்பேத்திய BSNL நிறுவனம்…!கடுமையாக சாடிய பி.டி உஷா…!அப்படி என்ன நடந்துச்சு!!!

0

பிரபல தடகள வீராங்கனை பி.டி உஷா வீட்டில் பல காலமாக பி.எஸ்.என்.எல் சேவையை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக  பி.எஸ்.என்.எல் சேவை சரியாக வேலை செய்யாமல் இருந்திருக்கிறது. இதுகுறித்து  புகார் தெரிவித்தும் பயனில்லை. இதனால் கடுப்பான பி.டி உஷா, தன்னுடைய ட்விட்டர் வாயிலாக BSNL நிறுவனத்தை வறுத்தெடுத்து உள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த  பி.டி உஷா அவர்கள் ஒரு புகழ்பெற்ற தடகள வீராங்கனை ஆவார். இவரின் அம்மாவுக்கு மொபைல் போன் பயன்படுத்த தெரியாத காரணத்தால் இப்பொழுது வரை பி.எஸ்.என்.எல் லேண்ட் லைன் மற்றும் பிராட்பேன்ட் சேவைகளை தன் வீட்டில் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இதன் சேவைகளான லேண்ட் லைன், பிராட் பேண்ட் இணைப்புகள் சரி வர வேலை செய்யாமல் இருந்து உள்ளது. இதை பற்றி புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் கோபமடைந்த   பி.டி. உஷா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் BSNL நிறுவனத்தின் மீது  கடுமையாக சாடி உள்ளார். அதில் ‘கடந்த சில மாதங்களாக உங்கள் சேவை எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. லேண்ட் லைன் போன் மற்றும்  இன்டர்நெட் இணைப்பு தொல்லை தந்து கொண்டே இருக்கிறது. இப்படியே போனால், நான் பி.எஸ்.என்.எல் இணைப்பை துண்டிக்க வேண்டியது இருக்கும்’ என தெரிவித்து இருந்தார். அவரின் இந்த பதிவு வைரலாகவே, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் மற்றும் பி.எஸ்.என்.எல் தலைமை நிர்வாகம் அவரை தொலைபேசி வாயிலாக அழைத்து சமாதானம் செய்தனர்.

இதனை அடுத்த 30 நிமிடத்தில் அவரின் வீட்டிலிருந்த லேண்ட் லைன் இணைப்பில் உள்ள தவறு  சரி செய்யப்பட்டது. மேலும் இது குறித்து அவர் கூறுகையில், தான் வெளி ஊரில் இருக்கும் போது இந்த மூலமாக எந்த தயார் தன்னை  தொடர்பு கொள்ள முடியும். மேலும் தன்னுடைய மகன் இப்போது எம்.டி படித்து வருகிறான். அவனுக்கு இதன் சேவை  அதிக அளவு தேவை. மேலும் பல நாட்களாக தான் பொறுமையாக இருந்ததாகவும் தற்போது பொறுமையை இழந்தால் தான் இந்த ட்விட்டர் பதிவை பதிவிட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here