சைக்கோ படம் சைமா விருதுக்கு பரிந்துரை – 9 பிரிவுகளின் கீழ் போட்டி!

0
சைக்கோ படம் சைமா விருதுக்கு பரிந்துரை - 9 பிரிவுகளின் கீழ் போட்டி!
சைக்கோ படம் சைமா விருதுக்கு பரிந்துரை - 9 பிரிவுகளின் கீழ் போட்டி!

உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படம் 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைமா விருதுகள் 2021 :

சைக்கோ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த உளவியல் ரீதியான ஆக்சன் திரைப்படமாகும். இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் எழுதி இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தை அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருந்தார். இதோடு சேர்த்து இந்த திரைப்படத்தில், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, அறிமுக நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் நடித்திருந்தனர். ரேணுகா, சிங்கம் புலி, ராம், ஆடுகளம் நரேன், ஷாஜி சென் ஆகியோரும் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தது குறிப்பிட தகுந்தது. தன்வீர் மிர் ஒளிப்பதிவில் இந்த படம் 2020, ஜனவரி 24 அன்று உலக அளவில் வெளியிடப்பட்டது.

சைக்கோ படம் சைமா விருதுக்கு பரிந்துரை - 9 பிரிவுகளின் கீழ் போட்டி!
சைக்கோ படம் சைமா விருதுக்கு பரிந்துரை – 9 பிரிவுகளின் கீழ் போட்டி!

இந்த நிலையில் இந்த படம் சைமா விருதுகள் 2021 இல் சிறந்த திரைப்படத்துக்கான விருதுகளில் 9 பிரிவுகளைச் சார்ந்த விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த பாடல், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த அறிமுக தயாரிப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் ஆகிய 9 பிரிவுகளின் கீழ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here