தமிழக மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த புதிய கட்டுப்பாடு., உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு!!

0
தமிழக மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த புதிய கட்டுப்பாடு., உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு!!
தமிழக மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த புதிய கட்டுப்பாடு., உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு!!

அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் தினந்தோறும் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் ஊசி, கத்தி, கையுறை மற்றும் காலாவதியான மருந்து உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் தனித்தனியாக பிரித்து வைக்கப்படுகிறது. பின்னர் இவை உயிர் மருத்துவ கழிவு மேலாண்மை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இந்த மேலாண்மை மையத்திற்கு புதிய நெறிமுறைகளை உயர்நீதிமன்றம் வழிவகுத்துள்ளது. அதாவது முறையாக கையாளப்படும் மருத்துவ கழிவுகளை மேலாண்மை மையத்திற்கு கொண்டு செல்கையில், இந்த குப்பைகள் வெளியிடங்களில் சிதறாத வகையில் வாகனம் முழுவதுமாக மூடப்பட்டிருக்க வேண்டும். மேலும் மருத்துவமனைகளிலும், மருத்துவ சேமிப்பு கிடங்கிலும் பார் கோட் வசதியுடன் ஸ்கேன் செய்து உறுதி செய்ய வேண்டும்.

மக்களே உஷார்., நாளை இந்த சேவை கிடைப்பதில் சிக்கல்! நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு!!

இதன்மூலம் எந்த ஒரு கழிவுகளும் வெளியிடங்களில் கொட்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இப்படி பாதுகாப்பான முறையில் உயிர் மருத்துவ கழிவுகளை கையாளாத மேலாண்மை மையத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here