தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – அரசாணை வெளியீடு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான அரசாணை கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

தமிழகத்தில் ஒன்றிய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அவ்வப்போது அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என ஊழியர்கள் அவ்வப்போது கோரிக்கை வைத்தபடி இருந்தனர். இந்நிலையில், கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, 75 ஆவது சுதந்திர தின விழாவன்று ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளபட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், தலைமைச் செயலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை உள்ள அனைத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க இருப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான அரசாணை தனித்தனியே கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here