தமிழகத்தில் ஆசிரியர்களின் பதவி உயர்வு எப்போது? தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியீடு!

0
தமிழகத்தில் ஆசிரியர்களின் பதவி உயர்வு எப்போது? தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியீடு!
தமிழகத்தில் ஆசிரியர்களின் பதவி உயர்வு எப்போது? தொடக்கக்கல்வி இயக்குனர் வெளியீடு!

தமிழகத்தில் தொடக்கக்‌ கல்வி இயக்ககத்தின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ ஊராட்சி ஒன்றிய நகராட்சி மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்‌ பணிபுரிந்து வரும்‌ ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான சுற்றிறக்கை வெளியாகி உள்ளது.

பதவி உயர்வு:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. இதையடுத்து தொடக்கக்‌ கல்வி இயக்ககத்தின்‌ கட்டுப்பாட்டின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ அனைத்து ஊராட்சி ஒன்றிய நகராட்சி மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது இப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும்‌ ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்த பட்டியலை தயார் செய்து தர வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்த சுற்றிறக்கையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஊராட்சி ஒன்றிய நகராட்சி மற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்த விவரத்தை தேர்ந்தோர்‌ பட்டியல்‌ – A, தேர்ந்தோர்‌ பட்டியல்‌ – B, தேர்ந்தோர்‌ பட்டியல்‌ – C1, தேர்ந்தோர்‌ பட்டியல்‌ – C2, தேர்ந்தோர்‌ பட்டியல்‌ – C3, தேர்ந்தோர்‌ பட்டியல்‌ – C4, தேர்ந்தோர்‌ பட்டியல்‌ – C5 உள்ளிட்ட குறியீட்டை பயன்படுத்தி தயாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பட்டியலை தயார் செய்து 15 தினங்களுக்குள் பணியை பூர்த்தி செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தொடக்கக் கல்வித்துறையில் பணி புரிந்து சம்பந்தப்பட்ட துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பெயர்களை மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒழுங்கு நடவடிக்கை ஈடுபட்ட ஆசிரியர்கள் பெயர்களும் இடம்பெற கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 1 பணியிடத்திற்கு 5 நபர்கள் என்ற வீதத்தில் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இது போன்ற விதிமுறைகளை பின்பற்றி பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இந்த விதிமுறையை மீறி செயல்படும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here