தமிழக பெண்கள், குழந்தைகளுக்கு ஜாக்பாட்.., 8.5 கோடி செலவில் ஸ்டாலின் தொடங்கிய புதிய திட்டம்!!

0
தமிழக பெண்கள், குழந்தைகளுக்கு ஜாக்பாட்.., 8.5 கோடி செலவில் ஸ்டாலின் தொடங்கிய புதிய திட்டம்!!
தமிழக பெண்கள், குழந்தைகளுக்கு ஜாக்பாட்.., 8.5 கோடி செலவில் ஸ்டாலின் தொடங்கிய புதிய திட்டம்!!

தமிழகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் செயல்பட வேண்டும் என கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நலத்திட்டங்களுக்கு வித்திட்டவராக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் கடந்த 1973ம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி தலைமையில் 22 பெண் காவலர்களுக்கு பணி நியமனம் வழங்கி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதைத்தொடர்ந்து 50 ஆண்டுகள் கடந்த நிலையில் மாநிலம் முழுவதும் சுமார் 35,329 பெண் போலீசார்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை சிறப்பிக்கும் வகையில் பெண் போலீசார்கள் தலைமையில் சென்னை நேரு அரங்கில் பொன்விழா இன்று அரங்கேறியது. இந்த விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக பெண் போலீசார் அணிவகுப்பு நடத்தி வரவேற்றனர்.

சென்னை வாசிகளே கவனம்., இந்த நாள் மட்டும் மெட்ரோ சேவை இரவு 12 மணி வரை நீட்டிப்பு.., மெட்ரோ நிர்வாகம் அதிரடி!!!

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வி பயின்று உயர்ந்த துறைகளில் பணியாற்ற வேண்டும் என கலைஞர் ஆசைப்பட்ட படி எல்லாமே மாறிக்கொண்டு இருக்கிறது. மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ரூ.8.5 கோடி செலவில் “அவள்” திட்டம் செயல்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையையும் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here