தொடரும் போராட்டம்.., இந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்.., மக்கள் கடும் அவதி!!!

0
தொடரும் போராட்டம்.., இந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்.., மக்கள் கடும் அவதி!!!
தொடரும் போராட்டம்.., இந்த பகுதியில் 144 தடை உத்தரவு அமல்.., மக்கள் கடும் அவதி!!!
நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. ஆனாலும் விவசாயிகள் வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். தற்போது வரை இதற்கு எந்த ஒரு முடிவும் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். அதாவது நாளை இந்த கோரிக்கைகளை அமல்படுத்த சொல்லி டெல்லியில் அமர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து போராட்டத்தின் போது எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக டெல்லி மாநிலத்தின் வடகிழக்கு பகுதிகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 வது பிரிவின்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here