பிளக்ஸ், பேனர்களால் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.., மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!!!

0
பிளக்ஸ், பேனர்களால் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.., மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!!!
பிளக்ஸ், பேனர்களால் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.., மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கட்சி கூட்டங்கள், திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற விஷேசங்களுக்கு பேனர்கள், போஸ்டர்கள் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இது போன்ற தேவையற்ற செயலால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார் வந்துள்ளது. இதனால் பொது இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த தடையையும் மீறி சிலர் இது போன்ற செயலை மீண்டும், மீண்டும் செய்கின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்ட மூவர் தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தலைவிகளுக்கு மாத உதவித்தொகை…, ஆகஸ்ட் 15 முதல் அமல்…, முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

இந்த சம்பவத்தால் இனி கோவை மாவட்டத்தில் விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஒரு வேலை பிளக்ஸ், பேனர்கள் வைக்க வேண்டும் என்றால் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here