விளையாட்டு திடல்களில் மதுபான பகிர்வுக்கு தடை வழக்கு., நீதிமன்றத்தில் அரசு கொடுத்த முக்கிய விளக்கம்!!

0
விளையாட்டு திடல்களில் மதுபான பகிர்வுக்கு தடை வழக்கு., நீதிமன்றத்தில் அரசு கொடுத்த முக்கிய விளக்கம்!!
பொதுவாக விளையாட்டு திடல்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் மதுபானங்கள் விநியோகிப்பதற்கு  தடை உள்ளது. ஆனால் அவற்றை மாற்றி திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாறிக் கொள்வதற்கு தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து மாநில அரசு சிறப்பு உரிமம் வழங்கியிருந்தது. தமிழக அரசின் சிறப்பு உரிமத்தை ரத்து  செய்ய கோரி சமூக வழக்கறிஞர் பேரவை சார்பில் வழக்கு மனு தாக்கல் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழக்கிற்கு கூடுதல் பதில் மனுவை  தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தாக்கல் செய்துள்ளது.

அதில் இந்திய வர்த்தகத்தின் கூட்டமைப்பின் கோரிக்கைகளை பரிசீலித்து தான் இந்த சிறப்பு உரிமம் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்  சர்வதேச கருத்தரங்கு மற்றும் விளையாட்டு திடல்களில் இதற்கான தனி இடம் ஒதுக்கப்பட்டு அங்கு மட்டும் மதுபானம் வழங்க கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் நிபந்தனைகளை பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கும் சிறப்பு படைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்  அந்த மனுவில் விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here