சோழ சாம்ராஜ்ஜியத்தின் பெருமையை திரைக்கு கொண்டு வந்த இயக்குனர்.. மணிரத்தினத்திற்கு கிடைத்த வெகுமதி!!

0
சோழ சாம்ராஜ்ஜியத்தின் பெருமையை திரைக்கு கொண்டு வந்த இயக்குனர்.. மணிரத்தினத்திற்கு கிடைத்த வெகுமதி!!

சோழ சாம்ராஜ்ஜியத்தின் பெருமையை தாங்கி வந்திருக்கும் பொன்னியின் செல்வன் படம், தமிழ் ரசிகர்களின் ஆவலுக்குரிய படமாக மாறியிருக்கிறது. இதனால் இயக்குனர் மணிரத்தினத்திற்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளது.

பொன்னியின் செல்வன்:

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் குந்தவையாக த்ரிஷா, வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுவேட்டையராக பார்த்திபன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த திரைப்படத்தில் ஒருபுறம் சோழர்களைப் பழிவாங்கத் துடிக்கும் பாண்டியர்கள் மறுபுறம் அதிகார போட்டியின் காரணமாக தங்களுக்குள் மோதிக் கொள்ளும் சோழர்கள் என 1000 வருடத்திற்கு முன்பு பார்வையாளர்களை அழைத்து செல்லும் வகையில் பிரமாண்டமாக இயக்குநர் படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் ரிலீஸ் ஆகிய நான்கு நாட்களில் 250 கோடியை வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்த தமிழ் படம் என்ற பெயரை பெற்றுள்ளது.

அதிதிக்கு வந்த ஆபத்து பாதிலேயே போயிருச்சு – இது நடந்திருந்தா ஆள் அட்ரஸ் இல்லாமல் போயிருப்பாங்க!!

இதனால் வெற்றி களிப்பில் திரைப்பட குழுவினர் உள்ளனர். இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்தை தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள், அவரது ஆபிஸ்கே சென்று சந்தித்து படத்தின் வெற்றிக்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியால், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பெருமை அடைவதாகவும் இயக்குனரிடம் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here