இரண்டு திருமணமும் போச்சு.., கணவனை ஷேர் செய்ய மறுத்த பிரபல நடிகை.., கண்ணீர் மல்க பேட்டி!!

0
இரண்டு திருமணமும் போச்சு.., கணவனை ஷேர் செய்ய மறுத்த பிரபல நடிகை.., கண்ணீர் மல்க பேட்டி!!
இரண்டு திருமணமும் போச்சு.., கணவனை ஷேர் செய்ய மறுத்த பிரபல நடிகை.., கண்ணீர் மல்க பேட்டி!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை குட்டி பத்மினி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, ஜெய்சங்கர் உட்பட பல்வேறு நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் துணிச்சலுடன் நுழைந்து, ஏராளமான தொடர்களை தயாரித்து அதிலும் தன்னுடைய தனி முத்திரையை பதித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை தொடர்ந்து அரசியலில் களமிறங்கி மக்களுக்கு சேவை செய்ய தொடங்கினார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, நான் செய்து கொண்ட முதல் கல்யாணம் சரியில்லாமல் போனதால் தான் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். அதிலும் எனக்கு பல பிரச்சனைகள் கிளப்பின. இருந்தாலும் அவரையும் விட்டு விட கூடாது என்பதற்காக அவருக்காக எல்லாத்தையும் பொறுத்து கொண்டேன்.

அட்ரா சக்க.., மகன் பிறந்த கொஞ்சம் நாட்களில் அட்லீக்கு அடித்த அதிர்ஷ்டம் – வெளியான சூப்பர் அப்டேட்!

அவர் மீது கோபம் வந்தாலும் என்னை நானே காயப்படுத்தி கொண்டேன். ஏன் ஒரு தடவை கையை கூட அறுத்துக்கொண்டு சாவு வரை சென்று மீண்டு வந்தேன். ஒரு மனைவி கணவனுக்காக எது வேண்டுமானாலும் விட்டு கொடுக்கலாம். ஆனால் கணவனையே இன்னொருத்திக்கு விட்டு கொடுக்க விரும்ப மாட்டாள்.

அவரை மற்றொரு பெண்ணுக்கு என்னால் ஷேர் செய்ய முடியாது என்பதால் அவரை விட்டு விலகி வந்தேன். தற்போது எனது குழந்தைகளுக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். அவர்கள் தான் என் வாழ்க்கையில் இந்த அளவுக்கு தைரியமாக இருப்பதற்கு காரணம் என்று கண்கலங்கி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here