Saturday, April 20, 2024

இந்த 4 வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தினை வாட்ஸ்அப் மூலம் அனுப்பலாம் – எளிய வழிமுறைகள்!!

Must Read

இனி இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனாளர்கள் இனி ஆப் மூலமாக பணத்தினை அனுப்பலாம் மற்றும் பெறலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு பயனாளர் ஒரு இந்திய வங்கி கணக்கு மற்றும் டெபிட் கார்டு வைத்திருத்தல் அவசியமான ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் முழுமாக பணம் அனுப்பும் வசதி:

இந்தியாவில் கடத்த நவம்பர் மாதம் வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பினை தெரிவித்தது. அதில் இனி இந்திய பயனாளர்கள் வாட்ஸ்அப் முழுமாக பணத்தினை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது. தற்போது இந்த நிறுவனம் இந்திய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றுடன் தனது செயலாக்கத்தை ஆரம்பித்து உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த வங்கிகளில் ஒரு அக்கவுண்டை வைத்திருப்பவர்கள் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இனி பண பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 400 மில்லியன் மக்கள் வாட்ஸ்அப்பினை பயன்படுத்தி வருகின்றனர், இந்த பண பரிவர்த்தனை சேவை மக்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எப்படி பயன்படுத்தி கொள்ளலாம்??

ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பயனர்களுக்கான செயல்முறைகளை வாட்ஸ்அப் நிறுவனம் தந்துள்ளது. அவை,

  • யாருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களுடனான சேட் ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  • அதில் “அட்டாச்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் “payments” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன் பின், அதில் உங்கள் டெபிட் கார்டு தகவலை சரிபார்க்கவும்.
  • பின், உங்கள் டெபிட் கார்டின் கடைசி 6 இலக்க எண்களை பதிவிடவும். உங்கள் டெபிட் கார்டின் காலாவதி தேதியை பதிவிட்டு “டன்” என்பதை கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு உங்கள் UPI PIN செட் செய்யவும். அதனை செட் செய்யும் போது உங்களுக்கு ஒரு OTP அடங்கிய மெசேஜ் உங்களுக்கு கிடைக்கும்.
  • அதில் OTP யை பதிவிடவும். மீண்டும் உங்களுக்கு ஒரு OTP வரும். அதன் பின் உங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட UPI பின்னை செட் செய்யவும்.
  • அந்த செயல்பாடுகள் முடிந்ததும் யாருக்கும் அனுப்ப வேண்டுமோ அவரது சாட்டிற்கு சென்று, அட்டாச் என்ற ஆப்ஷனில் “Payment” என்பதை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையினை உள்ளிட்டு பணத்தினை அனுப்பி விடலாம்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரை வாழ் மக்களுக்கு நற்செய்தி., கள்ளழகர் திருவிழாவிற்கு சிறப்பு ஏற்பாடு., வெளியான முக்கிய தகவல்!!!

மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா, கடந்த 12ஆம் தேதி தொடங்கி கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் உச்சபட்ச நிகழ்ச்சியான கள்ளழகர்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -