பிங்க் பாந்தர்ஸிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்…, புள்ளிப்பட்டியலில் திடீர் சரிவு!!

0
பிங்க் பாந்தர்ஸிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்…, புள்ளிப்பட்டியலில் திடீர் சரிவு!!
பிங்க் பாந்தர்ஸிடம் வீழ்ந்த தமிழ் தலைவாஸ்…, புள்ளிப்பட்டியலில் திடீர் சரிவு!!

புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம், தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவி புள்ளிபட்டியலில் பின் தங்கியுள்ளது.

புரோ கபடி:

பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் மூன்று கட்டமாக புரோ கபடி லீக் தொடரின் 9 வது சீசன் நடைபெற்று வருகின்றது . இதில், இறுதிக்கட்ட லீக் சுற்றுகள் அனைத்தும், விறுவிறுப்பாக 12 அணிகளுக்கு இடையே ஹைதராபாதில் நடைபெற்று வருகின்றது. இந்த வகையில், நேற்று, தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் போட்டியிட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் அர்ஜுன் தேஷ்வால் மற்றும் அஜித் குமார் அதிரடியாக செயல்பட்டு, புள்ளி எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கினர். இதனால், தமிழ் தலைவாஸ் அணி 26-41 என்ற புள்ளி வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸிடம் தோல்வியை தழுவியது.

இதனை தொடர்ந்து, ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் 33-23 என்ற புள்ளி வித்தியாசத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற இந்த போட்டிகளின் முடிவில், 59 புள்ளிகளுடன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 2வது இடத்திலும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 41 புள்ளிகளுடன் 10 வது இடத்திலும் உள்ளன. இதில், தமிழ் தலைவாஸ் அணியானது, 48 புள்ளிகளுடன் 7 வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here