வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்த ஆட்டம்…, அனல் பறந்த பர்தீப் நர்வாலின் அதிரடி!!

0
வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்த ஆட்டம்..., அனல் பறந்த பர்தீப் நர்வாலின் அதிரடி!!
வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்த ஆட்டம்..., அனல் பறந்த பர்தீப் நர்வாலின் அதிரடி!!

புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸுக்கு இடையிலான ஆட்டம் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது.

புரோ கபடி:

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில் நேற்று தமிழ் தலைவாஸ் அணியை எதிர்த்து, பாட்னா பைரேட்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில், தமிழ் தலைவாஸின் நரேந்தர் 12 ரைடுகள் சென்று, 3 போனஸ் புள்ளிகள் உட்பட 16 புள்ளிகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இவரை போலவே, பாட்னா பைரேட்ஸின் சச்சின் 10 ரைடுகளில் 14 புள்ளிகளை அணிக்காக எடுத்து அதிரடி காட்டினார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த போட்டியில், இரு அணி வீரர்களும் சமபலத்துடன் இருந்ததால், 33-33 என்ற புள்ளிகளுடன் போட்டியானது சமநிலையில் முடிந்தது. இதனால், பாட்னா பைரேட்ஸ் அணி 12 அணிகள் கொண்ட புள்ளிபட்டியலில் 41 புள்ளிகளுடன் 6 வது இடத்தையும், தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகளுடன் 7 வது இடத்தையும் பிடித்துள்ளன.

இது போன்ற மற்றொரு ஆட்டத்தில், தபாங் டெல்லி அணிக்கு எதிராக UP யோதாஸ் விளையாடியது. இதில், UP யோதாஸின் கேப்டன் பர்தீப் நர்வாலின் அதிரடியான ஆட்டத்தால், தபாங் டெல்லி அணி புள்ளிகளை இழந்து தடுமாறியது. இந்த தடுமாற்றத்தை பயன்படுத்திக் கொண்ட, UP யோதாஸ் 50-31 என்ற புள்ளி வித்தியாசத்தில் தபாங் டெல்லியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம், UP யோதாஸ் 45 புள்ளிகளுடன் 4 வது இடத்தை எட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here