புரோ கபடி லீக்: ஒரு புள்ளி வித்தியாசத்தில் வென்ற ஹரியானா ஸ்டீலர்ஸ்…, மீண்டும் முதலிடத்தை எட்டிய புனேரி பல்டன்!!

0
புரோ கபடி லீக்: ஒரு புள்ளி வித்தியாசத்தில் வென்ற ஹரியானா ஸ்டீலர்ஸ்..., மீண்டும் முதலிடத்தை எட்டிய புனேரி பல்டன்!!
புரோ கபடி லீக்: ஒரு புள்ளி வித்தியாசத்தில் வென்ற ஹரியானா ஸ்டீலர்ஸ்..., மீண்டும் முதலிடத்தை எட்டிய புனேரி பல்டன்!!
புரோ கபடி லீக் போட்டியில், ஒரு புள்ளி வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸை ஹரியானா ஸ்டீலர்ஸ் வீழ்த்தியது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

புரோ கபடி:  

புரோ கபடி லீக் தொடரின் 2வது சுற்றுகள் புனேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், நேற்று பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்த்து புனேரி பல்டன் அணி போட்டியிட்டது. இதில், ஆகாஷ் ஷிண்டே மற்றும் அஸ்லாம் இனாம்தார் இவர்களின் அதிரடியான ரைடுகளால், புனேரி பல்டன் அணி முழு ஆதிக்கத்தையும் செலுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் மூலம், புனேரி பல்டன் அணி 43-27 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. இதனால், 12 அணிகள் கொண்ட புள்ளிப் பட்டியலில், புனேரி பல்டன் அணி இந்த லீக்கில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி, 8 ல் வெற்றி, 2ல் டிரா மற்றும் 4ல் தோல்வி அடைந்து 49 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
இது போன்ற மற்றொரு ஆட்டத்தில், குஜராத் ஜெயண்ட்ஸை எதிர்த்து ஹரியானா ஸ்டீலர்ஸ் விளையாடியது. இந்த ஆட்டம் கடைசி வரை சமநிலையில் சென்றதால், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இறுதியில், ஹரியானா ஸ்டீலர்ஸ் 33-32 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், ஹரியானா ஸ்டீலர்ஸ் 36 புள்ளிகளுடன் 8 வது இடத்தை பிடித்துள்ளது. இதில், தமிழ் தலைவாஸ் அணி 35 புள்ளிகளுடன் 10 வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here