புரோ கபடி: பெங்களூரு புல்ஸை வீழ்த்திய புனேரி பல்டன்…, புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

0
புரோ கபடி: பெங்களூரு புல்ஸை வீழ்த்திய புனேரி பல்டன்..., புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!
புரோ கபடி: பெங்களூரு புல்ஸை வீழ்த்திய புனேரி பல்டன்..., புள்ளிப் பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

புரோ கபடி லீக் தொடரில், பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பல்டன் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து உள்ளது.

புரோ கபடி:

புரோ கபடி லீக் தொடரில், நேற்று ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக தபாங் டெல்லி அணி மோதியது. இந்த போட்டியில், தபாங் டெல்லியின் நவீன்குமார் 10 ரைடுகள் சென்று அதிரடியாக விளையாடி 4 போனஸ் உட்பட 15 புள்ளிகளை கைப்பற்றினார். இவரை போல, தபாங் டெல்லியின் ஆஷு மாலிக் 4 ரைடுகளில் 3 போனஸ் உட்பட 10 புள்ளிகளை எடுத்து தன் வசம் ஆக்கினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் மூலம், இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 42-30 என்ற புள்ளி வித்தியாசத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து, பெங்களூரு புல்ஸ் மற்றும் புனேரி பல்டன் அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. இதில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால், போட்டியானது கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது.

FIFA உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய ஈகுவடார்…, உள்ளூர் ரசிகர்களை ஏமாற்றிய கத்தார்!!

வெற்றிக்காக கடுமையாக போராடிய இந்த இரு அணிகளில், புனேரி பல்டன் 35-33 என 2 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம், புனேரி பல்டன் அணி 59 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை எட்டியது. இதே போல, தபாங் டெல்லி 45 புள்ளிகளை பெற்று 8 வது இடத்தில் இருந்து, 5 வது இடத்திற்கு முன்னேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here