புரோ கபடி லீக் 2022: இறுதிப் போட்டிகள் எங்கே?? எப்போது?? முழு விவரம் உள்ளே!!

0
புரோ கபடி லீக் 2022: இறுதிப் போட்டிகள் எங்கே?? எப்போது?? முழு விவரம் உள்ளே!!
புரோ கபடி லீக் 2022: இறுதிப் போட்டிகள் எங்கே?? எப்போது?? முழு விவரம் உள்ளே!!

புரோ கபடி லீக் தொடரின், லீக் சுற்றுகள் முடிவடைய உள்ள நிலையில், இந்த தொடருக்கான, பிளே ஆப் சுற்றுகள், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புரோ கபடி லீக்:

புரோ கபடி லீக் தொடரின் 9 வது சீசன் புனேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், பெங்களூரு புல்ஸ் அணி இதுவரை 14 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இதில், பெங்களூரு புல்ஸ் அணியானது, 9 ல் வெற்றி, 1ல் டிரா, 4ல் தோல்வி அடைந்து 51 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த அணியை தொடர்ந்து, புனேரி பல்டன் 49, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 48, UP யோதாஸ் 45 புள்ளிகளுடன் டாப் 5ல் உள்ளனர். பாட்னா பைரேட்ஸ் 41, தமிழ் தலைவாஸ் 38 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்த தொடரின் லீக் சுற்றுகள் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், முதல் ஆறு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே அப் சுற்றுக்கு முன்னேறும்.

ஹர்திக் பாண்டியாவால் இந்திய அணி வெற்றி பெறுமா??முட்டுக்கட்டையாக நிற்கும் நியூசிலாந்து!!

இதில், அதிக புள்ளிகளை பெற்று முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெரும். இந்த பிளே அப் சுற்றுகள் அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, அரையிறுதி போட்டிகள் 15ம் தேதியும், இறுதிப் போட்டிகள் மும்பையில் உள்ள சர்தார் வல்லபாய் படேலில் 17ம் தேதியும் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here