புரோ கபடி 2022: டாப் 10 ரைடர்ஸ் பட்டியல் வெளியீடு…, முதலிடம் யாருக்கு தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

0
புரோ கபடி 2022: டாப் 10 ரைடர்ஸ் பட்டியல் வெளியீடு..., முதலிடம் யாருக்கு தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!
புரோ கபடி 2022: டாப் 10 ரைடர்ஸ் பட்டியல் வெளியீடு..., முதலிடம் யாருக்கு தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

புரோ கபடி லீக் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், அதிக ரைட் பாயிண்ட்களை எடுத்தவர்களுக்கான டாப் 10 பட்டியல் குறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

புரோ கபடி:

புரோ கபடி லீக் தொடரின் 9 வது சீசன் பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களை மையமாக கொண்டு நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் இறுதி லீக் சுற்றுகள் அனைத்தும், தற்போது ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. 12 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், இதுவரை ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 18 போட்டிகளை விளையாடி முடித்துள்ளன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் படி, புள்ளிப் பட்டியலில், புனேரி பல்டன் (69), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (64), பெங்களூரு புல்ஸ் (63), UP யோதாஸ் (60), தமிழ் தலைவாஸ் (53) புள்ளிகளுடன் முதல் 5 இடத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்த லீக் போட்டிகளில் அதிக ரைட் பாயிண்ட்ஸ் எடுத்தவர்களுக்கான டாப் 10 பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் அர்ஜுன் தேஷ்வால் 229, பெங்களூரு புல்ஸின் பாரத் 219 மற்றும் பெங்கால் வாரியர்ஸின் மனிந்தர் சிங் 208 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

IND vs NZ 3rd odi: சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இல்லை என்றால்…, இதற்கு தயாராக இருங்கள்…, எச்சரித்த ஆகாஷ் சோப்ரா!!

இவர்களை தொடர்ந்து, தபாங் டெல்லியின் நவீன் குமார் 194, தமிழ் தலைவாஸின் நரேந்தர் 186, UP யோதாஸின் பர்தீப் நர்வால் 185, பாட்னா பைரேட்ஸின் சச்சின் 155, தெலுங்கு டைட்டன்ஸின் சித்தார்த் 142 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மிதமுள்ள போட்டிகளில் மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இந்த பட்டியலில் அதிக மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here