முதலிடத்தை தொடர்ந்து தனதாக்கி வரும் புனேரி பல்டன்…, குவியும் வெற்றிகளால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!

0
முதலிடத்தை தொடர்ந்து தனதாக்கி வரும் புனேரி பல்டன்..., குவியும் வெற்றிகளால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!
முதலிடத்தை தொடர்ந்து தனதாக்கி வரும் புனேரி பல்டன்..., குவியும் வெற்றிகளால் ரசிகர்கள் மகிழ்ச்சி!!

புரோ கபடி லீக் தொடரில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ந்து புனேரி பல்டன் அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.

புரோ கபடி:

புரோ கபடி லீக் தொடரின் 9 வது சீசன் பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் மூன்று கட்டமாக நடைபெற்று வருகின்றன. இதில், ஹைதராபாதில் இறுதிக்கட்ட லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக 12 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகின்றன. இந்த வகையில், நேற்று, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் புனேரி பல்டன் அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு எதிராக மோதியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி புனேரி பல்டன் அணியை எதிர்த்து கடுமையாக போராடியது. ஆனாலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 31-39 என்ற புள்ளி வித்தியாசத்தில், புனேரி பல்டன் அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் அர்ஜுன் தேஷ்வால் 8 ரைடுகளில் 19 புள்ளிகளை அள்ளிய போதும் அணி தோல்வியை சந்தித்தது.

இதனை தொடர்ந்து, பெங்கால் வாரியர்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் இடையில் போட்டி நடைபெற்றது. இதில், பெங்கால் வாரியர்ஸ் அணி 41- 38 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிகளின் மூலம், புனேரி பல்டன் அணி 64 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. பெங்களூரு புல்ஸ் அணி இந்த போட்டியில் தோற்றாலும், 58 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 54, பெங்கால் வாரியர்ஸ் 48 புள்ளிகளுடன் 3 மற்றும் 5 இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here