தமிழகத்தில் சமீபத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மற்றும் 500 பார்கள் மூடப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது தமிழகத்தில் ,மதுபான கடைகளின் எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிதாக குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும். அப்படி நல்வழிப்படுத்தும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பரிசு தொகை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.