நான் பார்பியா இல்ல…அனபெல்லாவா… பிரியங்கா நல்கார் கேள்வியால் தடுமாறி போன ரசிகர்கள்!!!

0

சன் டிவியில் படு பயங்கர ஹிட் சீரியலாக  ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இந்த சீரியலின் கதாநாயகி ரோஜா என்ற பிரியங்கா நல்கார் தனது இன்ஸ்டா பக்கத்தில் பிங்க் கலர் கவுனில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு ஏற்றார் போல ஒரு கேப்சன் பதிவிட்டு உள்ளார்.

தன்னுடைய 18 வயதில் திரைக்கு வந்தவர் பிரியங்கா நல்கார். இவர் முதன் முதலாக அறிமுகமானது தெலுங்கு சினிமாவில் தான். அதாவது  அந்தாரி பந்துவையா என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு வந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து வரிசையாக தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார்.

மேலும் இவர் ஓரிரு தமிழ் படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.அந்த வகையில் அவருக்கு தமிழில் முதல் படம் சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யனும் குமாரு என்ற  படம் தான். இதில் ஹன்சிகாவின் தோழியாக நடித்து உள்ளார். அதன் பிறகு காஞ்சனா 3 படத்தில்  சிறு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

நீங்க ஏன் அத காட்டாமல் போஸ் கொடுத்துருக்கீங்க இதுலாம் போங்கு… ரசிகர்களை ஏங்க வைத்த நிவிஷா!!!

இருப்பினும் அவர் இந்த அளவிற்கு புகழ் அடைந்தது சன் டிவியின் ரோஜா சீரியல் மூலமாக தான். இந்த சீரியலில் அவரின் அழகுக்கு என தனி  ரசிகர்கள் உள்ளனர் என்றால் அவர் கதையின் நாயகன் அர்ஜுன் உடன் சேர்ந்து  செய்யும் ரொமான்ஸ்க்கு என தனியாக ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் பல எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் இவர்  அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தனது  புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் கலர் கவுனில் ஆங்காங்கே ரோஜா பூக்களுடன் உள்ள ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்து உள்ளார். அதோடு சேர்த்து, ‘அனைத்து பெண்களும் ஒரு பொம்மை தான்… பார்பியா அல்லது அனபெல்லாவா’ என்றவாறு தலைப்பிட்டு உள்ளார். அவரின் இந்த பதிவு மற்றும் புகைப்படம் மூலம் ரசிகர்கள் தடுமாறி போய்  உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here